Take a fresh look at your lifestyle.

தமிழர்களின் பொது விரோதி எச்.ராஜாவை உடனே கைது செய்யவேண்டும் -வைகோ .!

தமிழக மக்களுக்கு தன்மானத்தையும், பகுத்தறிவையும் ஊட்டி, இந்திய உபகண்டத்துக்கே சமூக நீதியின் வெளிச்சத்தை வழங்கிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் சிலையை உடைக்க வேண்டும் என்று மமதையோடும், திமிரோடும் பேசிய எச்.ராஜாவை தமிழக அரசின் காவல்துறை கைது செய்யாமல், மத்திய அரசுக்கு கொத்தடிமை வேலை செய்கிறது.

திருப்பத்தூரிலும், சென்னையிலும், தாராபுரத்திலும் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட செய்தி தமிழக மக்கள் மனதில் ரண வேதனையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திருச்சி சோமரசம்பேட்டையில் 23.09.2018 இரவில் சிலையின் கைத்தடி உடைக்கப்பட்ட செய்தியும், ஒரத்தநாடு அருகே உள்ள காவராப்பட்டு என்னும் ஊரில் உள்ள தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட செய்தியும் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்கிறது.

மேடையில் பொது அமைதிக்கு விரோதமாகப் பேசினார் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாசை கைது செய்த தமிழக காவல்துறை எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? நீதிமன்றத்தையும், காவல்துறையையும் கீழ்த்தரமான சொற்களால் இழிவுபடுத்திப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் ஒரு பக்கம் வரும்போது, நாள்தோறும் காவல்துறை பாதுகாப்புடன் நிகழ்ச்சிகளில் அந்த மனிதர் கலந்துகொள்கிறார் என்றால் இதைவிட தமிழக காவல்துறைக்கு அவமானம் வேறொன்றும் இருக்க முடியாது.

பெரியார் சிலை அவமதிக்கப்படும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் காரணமான குற்றவாளி எச்.ராஜாதான் எனும் நிலையில், அவரை தமிழக காவல்துறை கைது செய்து தன் கடமையை ஆற்ற வேண்டும்.

இதுகுறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் திட்டவட்டமான அறிக்கை தந்துள்ளார். அதுவே தமிழக அரசுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை ஆகும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை – 8
24.09.2018

குறிப்பு:>