Take a fresh look at your lifestyle.

குழப்பம் விளைவிக்கும் ஆனல்ட்! திட்டமிட்டபடி நினைவேந்துவோம் போராளிகள் அறிவிப்பு!

நாளை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் திடீரென யாழ் மாநகரசபை மூக்கை நுழைத்ததையடுத்து, இந்த விவகாரம் சிக்கலாகியுள்ளது. திலீபனுடன் உண்ணாவிரதம் இருந்த மூத்த போராளிகள், போராளிகள், பொதுமக்கள் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வு நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திடீரென ஆர்னல்டின் அறிவிப்பு சிக்கலை தோற்றுவித்துள்ளது.

நினைவேந்தல் குழப்பம் ஏற்பட்டதும், திலீபனுடன் உண்ணாவிரத மேடையில் இருந்த பஷீர் காக்கா இதில் தலையிட்டு குழப்பத்தை சரிசெய்ய முயன்றார். மாவை சேனாதிராசாவுடனும் பேசி நிலைமையை சுமுகமாக்க முயன்றார்.

நேற்று போராளிகள், பொதுமக்கள் இணைந்து நிகழ்ச்சி நிரலொன்றை தயாரித்து, ஊடகங்களிற்கும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று ஏட்டிக்கு போட்டியாக யாழ் மாநகரசபை வேறு நிகழ்ச்சி நிரலொன்றை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், திலீபனுடன் உண்ணாவிரத மேடையில் இருந்த மூத்த செயற்பாட்டாளர் ஒருவரை சற்று முன் தொடர்பு கொண்டு, நாளைய நிகழ்வுகள் குறித்து வினவினோம்.

நாளை காலையில் திட்டமிட்டபடி தமது நினைவேந்தல் நிகழ்வுகள் நடக்கும் என்று உறுதிபட தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த வருடம் திலீபன் நினைவேந்தலை குழப்பும் விதமாக செயற்பட்ட தற்போதைய முதல்வர் ஆனல்டின் நினைவேந்தல் நிகழ்வும் நாளை காலையில் திட்டமிடப்பட்டுள்ளதால், நாளை நினைவுத்தூபியில் குழப்பம் வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பு:>