Take a fresh look at your lifestyle.

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக ஆளுநரை சந்தித்தார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றவாளியாக தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துள்ளார். சென்னை ராஜ்பவனில் நேற்று (திங்கட்கிழமை) இந்தச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அற்புதம்மாள் ஆளுநரிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளார். அத்தோடு, உச்சநீதிமன்றின் தீர்ப்பை ஏற்று தமிழக அரசு முன்வைத்துள்ள தீர்மானத்தை நிறைவேற்றுமாறும், தனது மகன் உள்ளிட்டோரை விடுவிக்குமாறும் அற்புதம்மாள் கோரியுள்ளார்.

அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் ஏழு பேரையும் விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளதென்றும், தமிழக அரசின் தீர்மானத்திற்கு இணங்க அவர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து தமிழக அரசு கூட்டிய அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அந்தத் தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

எனினும் இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, தனது மகன் உள்ளிட்டோரை விடுவிக்க கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:>