Take a fresh look at your lifestyle.

ஸ்னைப்பர் ரக துப்பாக்கி காணாமல் போவது சாதாரண விடயமல்ல; மகிந்த ராஜபக்க்ஷ

பொலிஸ் திணைக்களத்திற்கு சொந்தமான ஸ்னைப்பர் துப்பாக்கி ஒன்று காணாமல் காணாமல் போவது சாதாரண விடயமல்ல. இது மிகவும் கவனத்துக்குரிய ஒரு விடயமாகும் என சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

ஸ்ரீலங்காவின் தென்பகுதியில் உள்ள தங்காலயில்  இடம்பெற்ற பௌத்தமத நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களம் ஒன்றிலிருந்து இவ்வாறான துப்பாக்கி ஒன்று காணாமல் போனாள் இது மிகவும் கவனத்துக்குரிய அக்கறைக்குரிய முடியுமாகவே இருக்கும் ஏனென்றால் இந்த இந்தத் துப்பாக்கி யாருக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பது எவராலும் சொல்ல முடியாது எனவும் தெரிவித்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் படுகொலை செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆதரங்கள் கிடைத்துள்ள போதிலும் இதுவரையும் யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.