Take a fresh look at your lifestyle.

12 ஆவது நாளாகத் தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்

அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தமிழ் அர­சியல் கைதி­களின் உண்­ணா­வி­ரத போராட்டம் இன்று 12 ஆவது நாளா­கவும் தொடர்ந்து இடம்­பெறுகிறது.

இந் நிலையில் அர­சியல் கைதிகள் சிறைச்­சாலை உணவை புறக்­க­ணிக்கும், நிலையில் அவர்­க­ளது உடல் நிலை மற்றும் ஆரோக்­கியம் குறித்து விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களில் இரு­வ­ருக்கு தொடர்ந்தும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் சிறைச்­சா­லைகள் ஊடகப் பேச்­சாளர் துஷார உப்­புல்­தெ­னிய கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதிகள் தமது வழக்­கு­களை துரி­தப்­ப­டுத்­து­மாறு கோரிக்கை முன்­வைப்­ப­தாக கூறும் அவர், அது தொடர்பில் நீதி­மன்­றங்­க­ளிடம் அழுத்தம் பிர­யோ­கிக்கும் அதி­காரம் தமக்கு இல்லை எனவும், அதனால் கைதி­களின் கோரிக்­கையை தாம் சட்ட மா அதி­ப­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் மேலும் தெரி­வித்தார்.

இது தொடர்பில் சிறைச்­சா­லைகள் ஊடகப் பேச்­சாளர் துஷேர உப்­புல்­தெ­னிய தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

“குறித்த கைதிகள் தொடர்ந்தும் உணவை புறக்­க­ணிக்­கின்­றனர். அதனால் அவர்­க­ளது உடல் நிலை மோச­ம­டை­கின்­றது. எனவே எமது வைத்­தி­யர்கள் அவர்­களை பரி­சோ­தனை செய்து வரு­கின்­றனர். அவ­சியம் ஏர்­படும் போது அவர்­களை வைத்­தி­ய­சா­லை­யிலும் அனு­ம­தித்து சிகிச்­சை­ய­ளித்­துள்ளோம். தற்­போது இருவர் தொடர்ந்தும் வைத்­தி­ய­சா­லையில் உள்­ளனர்.

கைதி­களின் கோரிக்கை எமது அதி­கா­ரத்­துக்கு அப்பால் பட்டது. எம்மால் வழக்குகளை துரிதப்படுத்துமாறு நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. இந்த விடயம் குறித்து நாம் சட்ட மா அதிபருக்கு அரிவித்துள்ளோம்” என்றார்.

குறிப்பு:>