Take a fresh look at your lifestyle.

‘உடனே கிளம்பி வரவும்’: பசிலுக்கு அவசர உத்தரவு வழங்கிய மகிந்த

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அவசர அழைப்பையடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்றையதினம் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் விசேட அனுமதியுடன் பசில் ராஜபக்ஸ கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்காவில் தங்கியிருந்தநிலையில், அவர் எதிர்வரும் 10ஆம் திகதி நாடு திரும்புவதற்காக தயாராகி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் ஒன்றிணைந்த எதிரணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஒருங்கமைப்பு நடவடிக்கைகள் பல முன்னெடுக்க வேண்டியுள்ளமையால் உடனடியாக வருமாறு மகிந்த விடுத்த அவசர வேண்டுகோளிளையடுத்து பசில் ராஜபக்ஸ நேற்றை நாடு திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பு:>