Take a fresh look at your lifestyle.

கிளிநொச்சியில் தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகியது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு திலீபன் உயிர் நீத்த 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுடன் நிறைவு பெற்றது. குறித்த அஞ்சலி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்புாது பொதுச்சுடன் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் இடம்பெற்றது.

 
 

குறிப்பு:>