Take a fresh look at your lifestyle.

சாவகச்சேரி நிதி நிறுவன கொள்ளை: பெண் பணியாளரும் காதலனும் பிறிதொருவரும் கைது!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கத்தி முனையில் பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக நிறுவனத்தில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்தநிதி நிறுவனத்தில் கடந்த 19 ஆம் திகதி காலை சுமார் 18 லட்சத்து 91 ஆயிரத்து 21 ரூபா பணம் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டிருந்தது.

வழமை போன்று காலை நிதி நிறுவன பணியாளர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த பணத்தினை வங்கியில் வைப்பிலிடுவதற்காக தயாரான நிலையில், அங்கு கத்தியுடன் உள்நுழைந்த இருவர் அங்கிருந்தோரை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றனர்.

சாவகச்சேரி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில்குறித்த நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் அவரது காதலன் என அறியப்படும் இளைஞன் மற்றுமொருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.