Take a fresh look at your lifestyle.

தியாக தீபம் திலீபனின் நினைவாக கிளிநொச்சியில் உண்ணாவிரதம்!

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, பசுபதிப்பிள்ளை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பில் தியாக தீபம் திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியில் உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திலீபன் உயிர்நீத்த நேரமான காலை 10.50 வரை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, அதன் பின்னர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.கந்தசுவாமி ஆலய முன்னறில் அமைக்கப்பட்ட விசேட பந்தலில் இன்று புதன்கிழமைகாலை முதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.