Take a fresh look at your lifestyle.

பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வந்துள்ளேன்:ஜெனீவாவில் அனந்தி

இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாக ஜெனீவா வந்துள்ளேன் என வட மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி ஒரு அமைச்சராக வட மாகாண சபையின் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் தன்னாலேயே கண்டறிய முடியாதுள்ள நிலையில்இ சாதாரண பொதுமக்கள் எப்படி தமது உறவுகளை கண்டறிவார்கள் என்பதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்கவே ஜெனீவா வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்காவுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையவுள்ள நிலையில் ஐ.நாவுக்கும் உலகத்துக்கும் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஶ்ரீலங்கா அரசு இழுத்தடித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்க இந்த சர்வதேச சமூகம் என்ன பதிலைச் சொல்லப் போகின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

10 ஆண்டுகளை நெருங்கி வரும் நிலையில் மக்களின் நீதிக்கான போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில் ஶ்ரீலங்காவின் செயற்பாடுகள் அமைகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஜெனீவாவில் ஒரு வார காலம் தங்கி இருக்கும் அனந்தி சசிதரன்இ மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடங்களில் இடம்பெறுகின்ற கூட்டங்களிலும்இ மைய அமர்வுகளிலும் கருத்துரைகளை வழங்குகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

குறிப்பு:>