Take a fresh look at your lifestyle.

மன்னார் புதைகுழி அகழ்வுப் பணி இடைநிறுத்தம்: 143 எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னாரில் சர்ச்சைக்குரிய மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டுவந்த பக்கம் 14 அகழ்வுப் பணிகள் ஒரு வார காலத்துக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளன எனக் களனிப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.

விரிவுரைகள் உட்பட மேலும் சில காரணங்களைக் கருத்தில் கொண்டே அகழ்வுப் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது என்றும், ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் மீண்டு ம் பணிஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.

மன்னார் ச.தொ.ச. வளாகத்தில் கடந்த மே மாதம் ஆரம்பமாகிய இந்த மனிதப் புதைகுழி அகழ்வில், இதுவரை 143 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வுப் பணிகள், மன்னார் வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி, விசேட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் ராஜ்சோமதேவ ஆகியோர் தலைமையில் நடைபெறுகின்றன.

குறிப்பு:>