Take a fresh look at your lifestyle.

கைது செய்­யப்­பட்­டுள்ள இந்­தியர் மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர்: தூத­ரகம் தெரி­விப்பு

ஶ்ரீலங்கா அர­சியல் தலை­வர்­களின் உயிர்­க­ளுக்­கான அச்­சு­றுத்தல் தொடர்­பி­லான தக­வல்­களைக் கொண்­டி­ருந்­ததின் கார­ணத்­தினால் கைது செய்­யப்­பட்­டுள்ள இந்­திய நபர் 2000 ஆம் ஆண்­டி­லி­ருந்து மன­நிலைக் கோளாறு பின்­னணி கொண்ட ஒருவர் என கொழும்பில் உள்ள இந்­திய தூத­ர­கத்தின் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இது தொடர்பில் இந்­திய தூத­ர­கத்தின் அதி­காரி ஒருவர் தெரி­விக்­கையில் குறிப்பிட்டதாவது;

இந்­திய நாட்­டவர் ஒருவர் முக்­கி­ய­மான இலங்கை அர­சியல் தலை­வர்­களின் உயிர்­க­ளுக்­கான அச்­சு­றுத்தல் தொடர்­பி­லான தக­வல்­களைக் கொண்­டி­ருந்­ததின் கார­ணத்தால், இலங்கைப் பொலி­சாரால் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக ஊட­கங்­களில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­ததை நாங்கள் கண்டோம்.

விட­யத்தின் தீவிரத் தன்­மையைக் கவ­னத்தில் கொண்டும், மற்றும் இலங்கை அதி­கா­ரி­களால் வழங்­கப்­பட்ட மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­களின் அடிப்­ப­டை­யிலும், குறித்த நப­ரது பின்­ன­ணியைக் கண்­ட­றி­வ­தற்­கான ஒரு சோத­னையை நடத்­து­வ­தற்கு இந்­திய அதி­கா­ரி­களை நாங்கள் உட­ன­டி­யாக எச்­ச­ரித்தோம். அதன் படி, கிடைக்கப் பெற்ற ஆரம்பத் தகவல்கள், குறித்த நபர் 2000 ஆண்டிலிருந்து மனநிலைக் கோளாறு பின்னணி கொண்ட ஒருவர் எனச் சுட்டிக்காட்டுகின்றன.

குறிப்பு:>