Take a fresh look at your lifestyle.

மைத்திரிக்கு நன்றி தெரிவிக்கும் சிவாஜிலிங்கம்?

சர்வதேச சமூகத்தின் தலையீடு இன்றி தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்பதை  இனப்படுகொலைக்கு துணையாக  நின்ற மைத்ரிபால சிறிசேன தனது ஐ.நா பொதுச் சபை உரையின் மூலம் நிரூபித்துவிட்டதாக வட தமிழீழ  மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதற்காக தமிழ் இனம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்ட டெலோ இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசி சிங்களத் தலைவராக மைத்ரிபால சிறிசேனவே இருப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இனப்படுகொலைக்கு துணைநிற்கும்  சிறிசேன நிவ்யோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தின் ஆரம்ப நாளான நேற்று முன்தினம் செப்டெம்பர் 25 ஆம் திகதி உரையொன்றை ஆற்றியிருந்தார்.

இதன்போது தமிழீழ  மக்களின் தேசிய பிரச்சனையான இனப்பிரச்சனை தொடர்பிலோ அதற்கான தீர்வு குறித்தோ எந்தக் கருத்தையும் தெரிவிக்காத சிறிசேன, பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தனது ஆதரவை உலகத் தலைவர்கள் முன்னிலையில் தெரியப்படுத்தினார்.