Take a fresh look at your lifestyle.

சிங்கள   துடுப்பாட்ட சபையின் தலைமை நிதி அதிகாரிக்கு விளக்கமறியல்.?

சிங்கள   துடுப்பாட்ட  கட்டுப்பாட்டு சபையின் தலைமை நிதி அதிகாரியை விமல் நந்திக திஸாநாயக்கவை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழீழத்தின் அயல்நாடான சிங்கள துடுப்பாட்ட  நிறுவனம் செய்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொண்ட விசாரணைகளின் படி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பியல் நந்தன நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியுடனான போட்டித் தொடரிற்கான ஔிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்ய முற்பட்டமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:>