Take a fresh look at your lifestyle.

ஜனாதிபதியின் உத்தரவை மீறிச் செயற்படமாட்டேன்; பொலிஸ்மா அதிபர்

சட்டம் ஒழுங்கு அமைச்சுக்குப் பொறுப்பானவர் என்ற ரீதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பிரகாரமே செயற்படுவோம் எனப் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிசட்டம் ஒழுங்குகள் தொடர்பான முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்துவம பண்டார நேற்று முன் தினம் பொலிஸ் தலைமையகத்தில் கடிமொன்றைக் கையளித்திருந்தார்.

எனினும், வர்த்தமானியின் பிரகாரம் சட்டம் ஒழுங்கு அமைச்சு ஜனாதிபதியிடமே உள்ளது. அதனால் அந்தக் கடிதம் செல்லுபடியற்றதென பொலிஸ்மா அதிபர் மேலும் கூறினார்.

குறிப்பு:>