Take a fresh look at your lifestyle.

மெய்சிலிர்க்கும் அந்தச் சண்டை! – போர் முகம்-14

1 முதல் 12 வரை தொடர்களை கீழே சென்று பார்வையிடலாம்.

அறங்கீரனின் மெய்சிலிர்க்கும் அந்தச் சண்டைக்கதை எங்களின் மனங்களை அடுத்தது என்ன என்ற ஆதங்கத்தைக் கூட்டிவிட அந்தப்போராளியின் வாய் அசைவு மட்டுமே எங்கள் பார்வைக்குத் தெரிந்தது. அவன் எந்தத் தடையும் இல்லாமல் சாதனைக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்தான்.

எங்களின்ர அடியோட எங்களின்ர பொயின்ற்ருக்குக் கிட்ட வந்த ஆமிக்காறங்கள் கத்தினபடி கொஞ்சப் பேர் விழுந்திட்டாங்கள். மிச்சாக்கள் நிண்ட இடத்தில இருந்து பத்து மீற்றர் பின்னுக்குப் போட்டாங்கள்.

அந்தளவும் தான் மதி சந்தோசத்தில ஷஷகுடு மச்சான் குடு பாத்துப் பாத்துக் குடு|| எண்டு கத்திக் கத்திச் சுட்டுக் கொண்டிருந்தான். ஆமிக்காறங்கள் பின்னுக்குப் போனதோட எங்களுக்கு முறாள் ஏறிக்கொண்டு வந்திட்டுது. நாங்கள் எங்கண்ட எதிர்ப்பை இன்னும் கூட்டி நிதானமாய்க் குடுக்கத் தொடங்கீட்டம். அப்ப எங்கண்ட எதிர்ப்புக் கடுமையாய் இருந்தது. அவன் குண்டுகள அளவு கணக்கில்லாமல் எங்களுக்கு எறிஞ்சு கொண்டிருந்தான். பின்னுக்கிருந்து அவன் பி.கே.யும் ஆர்.பி.ஜி.யும் போட்டு அடிக்க முன்னுக்கு வாற ஆமிக்காறன் குண்டு குண்டாய் அடிச்சுக் கொண்டிருந்தான். ஒரே குண்டு தான் அண்ணா சும்மா மழைமாதிரி அடிச்சுக் கொண்டிருந்தான்|| என்றா அறங்கீரன் தனது கைகளால் புகையை விலக்குபவன் போல முகத்திற்கு நேராக அங்கும் இஞ்கும் விசுக்கிக் கொண்டிருந்தான்.

அவன் தான் போர்க்களத்தில் நிற்பதாய் என்னிக்கொன்டிருக்கின்றான் என்பதை எங்களிற்கு உணர்த்தியது. நாங்கள் எந்தக்கதையையும் கொடுக்கவில்லை. அறங்கீரன் தொடர்ந்தான். இப்பிடியே ஆமி முன்னுக்கு வர நாங்கள் அடிக்க குண்ட அடிச்சுப்போட்டு திரும்பி ஓடுவான். இதுதான் கொஞ்ச நேரம் சண்டை. சண்டை எண்டால் ஏதோ பெரிசாய்ப்பாத்த எங்களுக்கு இப்ப இது தான் சண்டை என்டவுடன விசராய் இருந்திச்சுது.|| என்றவன் ஒரு முறாய்ப்பான முகத்துடன் எங்களைப் பார்த்தான்.. அந்தப் போராளியின் முன் இவ்வளவு நாட்களாய்க் கற்பனையில்; நிழலாடிய சண்டை கடினமானதாய் இருக்கலாம் என்ற எண்ணம் பொய்த்து விட நிஜமான சண்டை கிடைத்தது அவனுக்கு விளையாட்டாய் இருந்தது.

சண்டைக் கதை விறுவிறுப்பாய் இருக்க நாங்களும் அந்தப் போராளியின் கதைக்கு அடிமையாகிக்கொண்டேயிருந்தோம். அதனால் இடையிடையே வருகின்ற சிறிய இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் ஷஷஅதுக்குப்பிறகு சொல்லுங்கோ|| என்று அறங்கீரனைத் தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தோம். அவன் தொடர்ந்தான். ஷஷநாங்களும் அடிக்கிறம் அவனும் போறதாய் இல்லை.

பின்னுக்குப்போறதும் பிறகு வாறதுமாய் இருந்தான். அப்ப கொஞ்ச நேரம் இப்பிடியே விளையாட்டாய்ப் போய்க் கொண்டிருந்தது. அவன் திடீரெண்டு வெப்பன் பவறக்கூட்டியிருக்க வேணும் பி.கே. அடியும் ஆர்.பி. ஜி. அடியும் எங்கள நோக்கிக் கூடுதலாய் வந்து கொண்டிருந்திது. அவன் அடிக்கிற ஆர்.பி.ஜி செல் இலக்குத்தவறி எங்களுக்கு மேலால போய்க்கொண்டும் எங்கண்ட பொயின்ருக்கு முன்னுக்கும் விழுந்து வெடிச்சுக் கொண்டிருந்தது. திடீரெண்டு அவன்ர ஒரு ஆர்.பி.ஜி. செல் வெடிச்ச சத்தம் எங்களின்ர காதைக்கிழிச்சுது. அப்ப ஒருக்கால் தலையைக் குனிஞ்சு போட்டு நிமிந்து பாத்தால் நான் நின்ட பொயிசணைக் கிளப்பிப் போட்டுது. அதோட நான் பொயிசனுக்கு வெளியால ஓடி வந்திடன்||என்றான்.

இப்ப வெளியால இருந்த ஐ…பங்கறுக்குள்ள இருந்த மதி முடிவெடுத்து ஆமிக்குக் குண்ட அடிச்சுப்போட்டு.

அவன்ர பீ.கே.காறன் இந்தா அதில வைச்சு அடிக்கிறான்|| என்றவன் திடீரெண்டு ஷஷஇந்தா பார் பி.கே.க்காறன நான் விழுத்திறன்; அடியப்பார்|| என்று கத்திக்கொண்டு தன்னட்ட இருந்த றைபிளால நிதானமாய்ச் சுட ஆமியின்ர பி.கே. அடி அதோட நிண்டுட்டுது. அவன்ர பி.கே க்காறன் விழுந்தத மதி கண்டிருக்க வேணும்என்றவனின் வீரமான குரல் திடிரென்று சற்று ஓய்ந்தது.

ஏன் என்ன கீரன்|| என்று நாங்கள் மெதுவாகக் கேட்க ஆமின்ர பி.கே.க்காறன் விழுந்திட்டான்|| பி.கே.க்காறன் விழுந்திட்டான்டா|| பின்னுக்கு இழுக்கப்போறான் குண்ட அடியுங்கோட ஆமியின்ர பீ.கே.யும் ஆமியின்ர பெடியும் எங்களுக்கு வேணும் குண்ட அடியுங்கோடா|| எண்டு கத்திக்கொண்டு மதி துள்ளி எழும்பினான் அண்ண. ஐ…பங்கறுக்குள்ள இருந்த மதி துள்ளி எழும்ப எங்கயோயிருந்து ஆமிக்காறன் அடிச்ச றவுண்ஸ் ஒண்டு மதியின்ர நெத்தில பட்டுப் பறிஞ்சிட்டுது. எங்களின்ர பொயின்ற்ருக்கு முன்னுக்கிருந்து அடிச்ச ஆமியின்ர எதிர்ப்பக் கட்டுப்படுத்தீட்டன் எண்டுற சந்தோசத்தோட அப்பிடியே மதி களத்தில சரிஞ்சிட்டான் அண்ண. என்றவன் தன்னுடன் கூடவே நின்று இந்த வெற்றிக்கு உழைத்த போராளி நண்பணை எண்ணியவனாய் மீண்டும் வாயடைத்துக்கொண்டான் அறங்கீரன்.

சுற்று அமைதியிக்குப்பிறகு ஷஷபேந்து என்ன நடந்தது தம்பி என்று நாங்கள் கதையைத் தொடங்கிநோம் உடன மதியை தூக்கிக் கொண்டு போய் பொயின்ருக்குள்ள வைச்சிட்டுத் தலைக்குக் கட்டுப்போட்டுட்டு நானும் செழியனும் ஆமிக்காறன முன்னுக்கு வராமல் அடிச்சுக் கொண்டிருந்தம். இப்பிடியே இருக்க என்னட்ட இருந்;த றவுண்ஸ் முழுக்கலும் முடிஞ்சுது. அப்ப செழியனிட்ட மச்சான் றவுணஸ் முடிஞ்சுது பொயின்ற்றுக்குள்ள இருகிற றவுண்சை எடுத்துக்கொண்டு வா நான் இருக்கிறத வைச்சுச் சமாளிக்கிறன்|| என்றேன். செழியனும் எடுத்து வாறன் என்டுட்டுப் பொயின்றுக்குள்ள போட்டு அங்க றவுண்ஸ் இல்லை எண்டு வந்து சொன்னான். இப்ப என்ன செய்யிறது எண்டு தெரியாமல் இருந்திது. எங்களிட்டையும் றவுண்ஸ் முடியுது. என்ன செய்யிறது. மதியையும் இந்தப்பொயின்ரில இழந்திட்டம்.

எனியும் ஆமிய வர விட்டால் மதியின்ர கனவு அழிஞ்சு போடும் எண்டு மனதிற்குள்ள யோசிச்சுக் கொண்டிருந்திட்டு செழியனிட்ட வோக்கியக் குடுத்திட்டு நான் றவுன்ஸ் எடுக்கப் பொயின்ருக்குள் பாய்ந்துவிட்டேன்|| என்றான் அறங்கிரன். நீங்கள் பொயின்ருக்குள்ள போய்ப் பிறகு|| என்று கேட்க்க நான் பெயின்ருக்குள்ள போனது தான் அவன் அடிக்கிற ரவுண்ஸ் எல்லாம் பெயின்றில ஷபடபட| எண்டு வந்து அடிபட்டுக் கொண்டிருக்குது. அதையும் பொருட்படுத்தாமல் நான் உள்ளுக்க போய் ரவுண்ஸ் பையள் இருந்த இடத்துக்குப் போட்டன். அங்க றவுண்ஸ் இருந்ததைக்கண்ட உடன எனக்கு சந்தோசம் எண்டால் உச்சில அடிச்ச சந்தோசம் அண்ண என்றாவனின் வாயில் அப்போது தான் சிரிப்பு வந்தது. அதுக்குப் பிறகு நீங்கள் என்ன செய்தீங்கள் என்று கேட்க அறங்கீரன் தொடர்ந்தான்.

அண்ண நான் றவுண்ஸ் பையள் எல்லாத்தையும் எடுத்துக் கொண்டிருக்க அவன் அடிச்ச ஆர்.பி.ஜி. செல் ஒண்டு எங்கண்ட பொயின்ருக்கு முன்னுக்கு விழுந்து வெடிச்சு அதில கிளம்பின மண் தலைக்கு மேல எல்லாம் வந்து கொட்டுண்டுது. ஆனால் நான் பயப்பிடவேயில்லை|| என்றான் மிகவும் தயிரியமாக. அதுக்கிடையில நான் எல்லா றவுண்சையும் தூக்கிக் கொண்டு நான் வெளியால வந்திட்டன்.

என்றான். நான் வெளியால வந்தவுடன றவுண்சை நிரப்பிப்போட்டு செழியனிட்ட வோக்கியக் குடுத்திட்டு ஆமிக்கு அடிக்கத் தொடங்கீட்டன். என்றவனின் சண்டை வேகத்தை நினைத்துப் பெருமிதப்பட்டுக் கொண்டோம். அறங்கீரன் சண்டையில் நிற்பது போலவே எங்களுடன் சண்டைக் கதையையும் சொல்லிக் கொண்டிருந்தான். செழியன் கட்டளைப் பணியகத்துக்கு கள நிலைமைகளைச் சொல்லி அவர்களின் கட்டளைகளை எனக்குச் சொல்லிக்கொண்டு சண்டையும் பிடிச்சுக் கொண்டிருந்தான்.||

இப்பிடியே சண்டை மூர்க்கமடைந்து கொண்டிருந்தது. நான் அவனும் நிற்பதாய் இல்லை. அவன் எங்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான். இதுவரையும் பங்கறுக்குள்ள குனிஞ்சு நிண்டு சண்டை பிடிச்ச நான் ஆவேசத்தில கொஞ்சம் மேல எழும்பி ஆமிக்காறனை வடிவாய் நிமிந்து பாத்துக்கொண்டு நிண்டு பாத்துப்பாத்து அடிக்கத்தொடங்கீட்டன் என்றான். இப்ப உங்களுக்கு அவன் அடிக்கிறது பிடிக்குமே என்றோம்.

பிடிக்கும் தான் ஆனால் ஒண்டும் செய்ய ஏலாது. அப்பிடித்தான் அடிக்க வேணும்.என்றாவன் தொடர்ந்தான். இப்பிடியேயிருக்க ஆமிக்காறன் அடிச்ச டொங்கான் செல் ஒண்டு வந்து நாங்கள் நிண்ட பங்கறுக்கு முன்னுக்கு விழுந்து வெடிச்சிது. அதில இருந்து வந்த பீஸ் ஒண்டு என்ர தலையில பட ரத்தம் சீறிக்கொண்டு வந்திட்டு. அப்ப நான் மெதுவாய் தலையைத் தடவிப்பாத்தன் அது ஒரு சின்னக்காயம் தான்.

என்ர தலையில இருந்து ரத்தம் வாறதக் கண்ட செழியன் என்னைப் பொயிசனுக்குள்ள போய் இருங்கோ நான் தனிய நிண்டு அடிபடுறன் எண்டு சொல்ல நான் எனக்குப் பிரச்சினையில்ல சின்னக்காயம் தான் நானும் நிக்கிறன் எண்டு சொல்லிக்கொண்டு இருவருமாகச் சேர்ந்து சண்டை பிடிச்சம். என்றவனின் ஓர்மத்தை நினைக்க எங்களிற்குள்ளும் ஒரு வேகம் பிறந்து கொண்டிருப்பது போல இருந்தது. இந்த நிலையில் எங்கட கொம்பனி லீடர் நீலவாசன் அண்ணாக்கு எங்களுக்கு சப்பிளே அனுப்பும் படி அறிவிச்சம்.

நான் சொல்லிப் போட்டுத்திரும்ப பின்னுக்குப் பெடியளோட எங்கண்ட பொயிசனுக்கு வந்திட்டார். அங்க நேர வந்து எல்லாத்தையும் ஒழுங்கு படுத்திப் போட்டு உதவிக்கு கயல்வேந்தன் என்ற போராளியை எங்களிடம் தந்துவிட்டு அடுத்த காப்பரணுக்குப் போய்க் கொண்டிருந்தார்.

என்றவனிடம் இப்ப உங்களுக்கு கொஞ்சம் சப்போட் கூடியிருக்கும் என்ன என்றோம். ஓம் என்பதாய்த் தலையை ஆட்டிய அறங்கீரன் ஷஷகயல்வேந்தனையும் வைச்சு வடிவாய் ஒழுங்குபடுத்தி ஒரு குடுவை குடுத்துக் கொண்டிருந்தம். நாங்கள் அடிச்சாப் பிறகு செழியன் தன்னட்ட இருந்த குண்டில ரெண்டு குண்டு அடிச்சான். அதோட தான் அவன்ர எதிர்ப்பு எங்களிற்குக் குறைஞ்சது. என்றவனின் முகத்தில் ஒரு சிறு நிறைவு தெரிந்தது. இப்பிடியே இருக்க எங்களுக்குப் பக்கத்துப் பொயின்ரில இருந்து காயப்பட்ட மணி எண்டுற போராளியை பின்னுக்கு அனுப்பிறதுக்கு ஆக்கள் இல்லை எண்டு கேக்க நாங்கள் கயல்வேந்தனை உதவிக்கு அனுப்பிப் போட்டம்|| என்றான்.

நெருக்கடி நிலைக்குள்ளும் போராளிகளின் உதவும் மனப்பக்குவத்தை எண்ணி மனம் மகிழ்ந்து கொண்டோம். பிறகு எங்கண்ட டொக்டர் இசைமணியை எங்கண்ட பொயின்ருக்கு வரச்சொல்லி அறிவிச்சம். இசைமணி வந்து எல்லாத்தையும் பாத்திட்டு மருந்து கட்ட வேண்டியதுகளுக்கு மருந்து கட்டி எல்லாத்தையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான் என்றான்.

இப்ப ஆமிக்காறன் உங்களில இருந்து எவ்வளவு தூரத்தில நிக்கிறான்|| என்று கேட்டோம். இந்தச் சம்பவம் நடக்கேக்க ஆமி எங்களில இருந்து நூறு மீற்றருக்குப் பின்னுக்குப் போட்டான்|| என்றான். அவன்ர செல்லடி எங்கண்ட பொயிற்றுக்க வரத்தொடங்கீட்டுது. ஷசெல்| வரவே எங்களின்ர பக்கம் அவன்ர நடவடிக்கையை நிப்பாட்டீட்டான் எண்டுறது விளங்கீட்டுது என்றான்.

இந்தச் சண்டையில மதியை நாங்கள் இழந்திட்டம். எங்கண்ட பொயின்ர அவன் உடைக்காமல் இருந்ததுக்கு மதியின்ர அடி தான் முக்கியமாய் இருந்தது. ஆமிய விடக்கூடாது எண்டு சண்டை பிடிச்ச மதியின்ர கனவை நாங்கள் நனவாக்கிப் போட்டம். ஆனால் மதிதான் எங்களோட இல்ல.என்றவனின் கண்கள் மதிக்காய் இரங்கிக் கொண்டிருந்தன. சற்று நேரத்தின் பின்; மதி கடசியாய்ச் சுட்டதில ஆமின்ர பி.கே.க்காறன் உண்மையாய் விழுந்திட்டானோ||என்றோம்.

அந்தப் பி.கே.க்காறன் நிண்ட இடத்தில ரத்தம் கனக்கக்கிடந்தது. அதோட அதில பி.கே. பரல் ஒண்டும் கோல்சறும் கொஞ்ச றவுண்சும் எடுத்த நாங்கள் என்று மதியின் இலக்குப் பிசகாத அடியின் சாட்சியத்தை எங்களிற்கு உறுதிப்படுத்திக் கொண்டிருந்தான் அறங்கீரன். அப்படியே முன்னணிக் காப்பரண்களை நோக்கிய எங்களின் நகர்வை ஆரம்பித்தோம்.

தொடரும்…..

தாரகம் இணையத்தில் இத் தொடரை தொடர்ந்து படிக்கலாம்

போர் முகம்-01

போர் முகம்-02

போர் முகம்-03

போர் முகம்-04

போர் முகம்-05

போர் முகம்-06

போர் முகம்-07

போர் முகம்-08

போர் முகம்-09

போர் முகம்-10

போர் முகம்-11

போர் முகம்-12

போர் முகம்-13

குறிப்பு:>