Take a fresh look at your lifestyle.

அமெரிக்காவிற்கு ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு.!

அமெரிக்கா குறைந்த தூர ஏவுகணை தயாரிப்பை மேம்படுத்தத் தொடங்கினால், ரஷ்யாவும் அவ்வாறே செயற்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா சோவியத் யூனியன் இடையே 1987-ஆம் ஆண்டு குறுகிய தூர அணு ஆயுதப் படை ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 500 முதல் 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய அணு ஆயுதம் தாங்கிய அல்லது சாதாரண ஏவுகணைக்கு அந்த ஒப்பந்தத்தின் படி தடை விதிக்கப்பட்டது.

ஆனால், அமெரிக்கா – ரஷ்யாவிடையே பனிப்போர் நிலவும் சூழலில் அதைக் கைவிடுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

இருநாட்டு உறவிலும் சுமூக நிலை ஏற்படுத்தும் பொருட்டு பெல்ஜியத்தில் நேட்டோ தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் 60 நாட்கள் அவகாசத்தை ரஷ்யாவுக்கு வழங்குவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ கூறினார்.

இந்நிலையில், அமெரிக்கா குறுகிய தூர ஏவுகணையை மேம்படுத்தத் தொடங்கினால், ரஷ்யாவும் அவ்வாறே செய்யும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

குறிப்பு:>