Take a fresh look at your lifestyle.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்​ உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, நேற்று (05), பொலன்னறுவையில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, வடமத்திய மாகாண சபை உறுப்பினர் ​அமரகீர்த்தி அதுகோரல ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொலன்னறுவை போதனா வைத்தியசாலையிலிருந்து, கதுருவெல நகர் வரை வந்தடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சபாநாயகர் கரு ஜயசூரியவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர்.

குறிப்பு:>