நாமல் குமாரவின் அலைபேசி வெளிநாட்டுக்கு அனுப்படும்
சிறிலங்காவில் ஊழல் ஒழிப்புப் பிரிவின் நடவடிக்கைப் பணிப்பாளர் நாமல் குமாரவின் அலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட தரவுகளை மீட்பதற்காக அது வெளிநாடொன்றுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள அந்த அலைபேசி குரல், ஒளிப்பதிவுகள் சில அழிக்கப்பட்டுள்ளமையால் அந்தத் தரவுகளை மீட்பதற்காக அவரது அலைபேசியைத் தயாரித்த ஹாங்கொங் நாட்டுக்கு அடுத்த வாரமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கோட்டை நீதிவான் ரங்க திசாநாயக்கவுக்கு அறிவித்தனர்.
நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள அந்த அலைபேசி குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கைக்கமையை நீதவான் விடுவித்துள்ளார்.
குறிப்பு:>