Take a fresh look at your lifestyle.

சம்மந்தனின் கதிரை சாய்த்த மகிந்த

 

ஶ்ரீலங்கா, பாராளுமன்றம் சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

சபை நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் சபாநாயகர் புதிய எதிர்க்கட்சித் தலைவர்,புதிய ஆளுந்தரப்பு பிரதான கொறடா மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்காக பெயரிடப்பட்டவர்களை அறிவித்தார்.

அதனடிப்படையில்,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பு பிரதான கொறடாவாக ஐக்கிய தேசியக் கட்சியின் (பா.உ) லக்‌ஷ்மன் கிரியெல்லவும், எதிர்க்கட்சியின் பிராதம கொறடாவாக ஐ.ம.சு.கூ பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவும் (பா.உ) நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:>