Take a fresh look at your lifestyle.

மீண்டும் நெருக்கடி ஏற்படலாம்: எஸ்.பி.எச்சரிக்கை

பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி அந்­தஸ்து வழங்­கப்­ப­டா­விட்டால் மீண்டும் நெருக்­கடி நிலைமை ஏற்­படக் கூடும். தற்­போது எதிர்க்­கட்சி அந்­தஸ்து வகிக்கக் கூடிய பெரும்­பான்மை எம்­மி­டமே காணப்­ப­டு­கின்­றது. அத்­தோடு எதிர்­கட்சி தலைவர் பத­வியை வகிக்கக் கூடிய தகுதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கே காணப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் சபா­நா­யகர் கரு­ஜய சூரி­ய­வுக்கு அறி­விக்­க­வுள்ளோம். அவர் எமது கோரிக்­கையை ஏற்­றுக்­கொள்வார் என எதிர்­பார்­கின்றோம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

இன்­றைய பாரா­ளு­மன்ற அமர்வில் கலந்­து­கொள்­வது பற்றி ஸ்ரீலங்கா சுதந்­தி­ர­கட்­சியின் நிலைப்­பாடு தொடர்பில் வின­விய போதே அவர் இதனைத் கூறினார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்­பி­டு­கையில்,

ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் தேசிய அர­சாங்­கத்தை கொண்டு செல்ல முடி­யாது என தீர்­மா­னித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த ஒக்­டோபர் மாதம் 26 ஆம் திகதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­தி­ருந்தார். எனினும் அது தவறு என்ற ரீதியில் நீதி­மன்­றத்­தினால் தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. நீதி­மன்ற தீர்ப்­பிற்கு நாம் மதிப்­ப­ளிக்­கின்றோம். எனினும் தற்­போ­துள்ள பெரும்­பான்­மையின் படி எமக்கே எதிர்­கட்சி ஆச­னமும் வழங்­கப்­பட வேண்டும்.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எதிர்­கட்­சி­யாக இது­வரை காலமும் செயற்­பட்­டி­ருந்த போதும், அவர்கள் எத­னை­யுமே செய்­த­தில்லை. மாறாக அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் ரணில் விக்­ர­ம­சிங்­கவை பாது­காக்கும் வகை­யி­லேயே செயற்­பட்­டுள்­ளனர். எதிர்­கட்­சி­யாக இருந்து கொண்டு வரவு – செலவு திட்­டத்­திற்கும் ஆத­ர­வ­ளித்­துள்­ளனர் என்றார்.

கேள்வி ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­லி­ருந்து துமிந்த திஸா­நா­யக்க உள்­ளிட்ட பத்து உறுப்­பி­னர்கள் ஐக்­கிய தேசிய கட்­யுடன் இணை­ய­வுள்­ள­தோடு, அமைச்சு பத­சி­க­ளையும் ஏற்­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் கருத்­துக்கள் வரு­கின்­ற­னவே?

பதில் அவ்­வாறு எதுவும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைவர் என்ற அடிப்­ப­டையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்­கொண்ட தீர்­மா­னத்தின் அடிப்­ப­டை­யி­லேயே கட்சி என்ற ரீதியில் நாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்தோம். எனினும் இனியொரு போதும் அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்படாது. எதிர்கட்சியில் இருந்து கொண்டு எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

குறிப்பு:>