Take a fresh look at your lifestyle.

அரசியலில் இறங்கத் தயார்: மைத்திரியும் ஆதரவு என்கிறார் கோத்தா

மக்­களின் அபிப்­பி­ரா­யத்­துக்கு இணங்க நான் அர­சியல் களத்தில் இறங்­க­வுள்ளேன். இந்த நகர்­வு­க­ளுக்கு மஹிந்த ராஜபக் ஷ இணக்கம் தெரி­வித்­துள்­ள­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆத­ரவும் இருக்­கின்­றது என்று முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் கோத்­த­பாய தலை­மையில் அடுத்த தேர்­தல்­களை சந்­திக்க வியத்­ம­க­வி­னூ­டாக புதிய வேலைத்­திட்­டத்தை கையா­ளவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. வியத்­மக அமைப்பு உள்­ளிட்ட முக்­கிய அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­க­ளுடன் மேற்­கொள்­ளப்­பட்ட தனிப்­பட்ட சந்­திப்­பொன்­றி­லேயே ராஜ­பக்ஷ இந்த விட­யத்தை குறிப்­பிட்­டுள்ளார்.

கடந்த சில வாரங்­க­ளாக அமெ­ரிக்க விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் நாடு திரும்­பி­யி­ருந்தார். நாடு திரும்­பிய கோத்­த­பாய வியத்­மக அமைப்பின் பிர­தி­நி­தி­க­ளு­டனும் சில முக்­கிய பிர­தி­நி­தி­க­ளு­டனும் தனிப்­பட்ட சந்­திப்­பொன்­றினை முன்­னெ­டுத்­துள்ளார். அர­சியல் களம் குறித்து அதில் முக்­கி­ய­மான கலந்­து­ரை­யாடல் ஒன்­றி­னையும் முன்­னெ­டுத்­துள்ளார். இதில் தமது அடுத்த கட்ட அர­சியல் பயணம் குறித்தும் கோத்­த­பாய ராஜ­பக்ஷ கலந்­து­ரை­யா­டி­யுள்ளார்.

இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது தாம் அடுத்த கட்ட அர­சியல் நகர்­வு­களை இலக்கு வைத்து பய­ணிக்க வேண்டும் எனவும், கூட்­ட­ணி­யா­கவோ அல்­லது தமது அணி­யா­கவோ கள­மி­றங்கி அதி­கா­ரங்­களை கைப்­பற்றும் முயற்­சி­களை கையாள வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

மக்கள் மத்­தியில் தம் மீதான அபிப்­பி­ரா­யங்­களை பெற்­றுக்­கொள்­ள­வேண்டும் என்­ப­துடன் அதில் சாத­க­மான தன்­மைகள் காணப்­படும் பட்­சத்தில் அடுத்த கட்ட அர­சியல் பய­ணத்தை முன்­னெ­டுக்க முடியும் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் முன்­னோக்கி செல்­லக்­கூ­டிய சாத­க­மான கார­ணி­களை அமைத்­து­கொண்டால் தற்­போ­தைய எதிர்க்­கட்சி தலை­வரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜபக் ஷ அதற்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கவும் தயா­ராக உள்­ள­தா­கவும் தாம் இரு­வ­ரும்­இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் அந்த சந்­திப்பின் போது கோத்­த­பாய ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஆத­ரவு தமக்கு இருப்­பதை இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது குறிப்­பிட்­டுள்ள முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டனும் ஆரம்­பத்தில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­ய­தா­கவும் அதில் சாத­க­மான பதில்கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­துடன் அதே நிலைப்­பாட்டில் இன்றும் ஜனா­தி­பதி உள்ளார் என்ற கார­ணி­யையும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் முக்­கிய சில உறுப்பினர்களை மாத்திரமே ஒன்றிணைந்து புதுவருட நிகழ்வொன்றை நடத்தியுள்ளதுடன் அந்த நிகழ்வில் இந்த விடயங்களை கோத்தபாய ராஜபக்ஷ பகிர்ந்துகொண்டுள்ளார்.

வியத்மக அணியினர் வெகு விரைவில் புதிய வேலைத்திட்டங்கள் சிலவற்றை ஆரம்பிக்க இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பு:>