Take a fresh look at your lifestyle.

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு இந்திய பக்தர்களுக்கு அழைப்பு!

 

வடதமிழீழம், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்ளுமாறு இந்திய பக்தர்களுக்கு, யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் திருவிழா இடம்பெறுகின்றது.

இந்நிலையில் இந்த திருவிழாவில் பங்கேற்க இந்திய, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு யாழ்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை திருவிழா குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்திலான முதல் கட்ட ஆய்வு கூட்டம் யாழ்பாணத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:>