Take a fresh look at your lifestyle.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார்: கோத்தபாய தெரிவிப்பு

 

ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாரென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமென தங்களுக்கு தெரியுமென்றும், நீங்கள் தயாரென்றால் நானும் தயாரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் புதிய அரசியலமைப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், புதிய அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் எனும் அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை மக்கள் என்ற அடையாளத்தை மக்களிடத்தில் உணரச் செய்ய வேண்டுமென்றும், அதனடிப்படையில் பிளவுபடாது இலங்கையர்களாக வாழ வேண்டியதன் அவசியத்தை மக்கள் உணர்வார்கள் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் சில அரசியல்வாதிகள் இனவாதத்தையும், தேசியவாதத்தையும் தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறிப்பு:>