Take a fresh look at your lifestyle.

ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் அறிவிப்போம்: பசில் சொல்கிறார்

இந்த ஆண்டு முடி­வ­டை­வ­தற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுன தலை­மை­யி­லான கூட்­ட­ணியின் சார்பில் புதிய ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை தெரி­வு­செய்ய நாம் தயா­ராக உள்ளோம். வீழ்ச்சி கண்­டுள்ள நாட்­டை மீட்­டெ­டுக்க சக­ல­ரதும் ஒத்­து­ழைப்­புடன் புதிய ஜனா­தி­ப­தியின் தலை­மைத்­து­வத்தில் செயற்­ப­டுவோம் என்று ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தேசிய அமைப்­பாளர் பசில் ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

அடுத்த தேர்­தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்து ஏனைய 7 மாகா­ணங்­க­ளையும் தாம் கைப்­பற்­று­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். மஹர பிர­தே­சத்தில் நேற்று ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் இளைஞர் அமைப்­பு­ட­னான சந்­திப்­பி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்­டுள்ளார். இதன்­போது அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;

நாம் அர­சியல் ரீதியில் பல­மான கட்­சி­யாக உள்ளோம், நாம் கட்­சி­யாக செயற்­பட ஆரம்­பித்த ஒரு ஆண்­டு­கா­லத்தில் 72 ஆண்­டு­கால அர­சியல் வர­லாற்றை கொண்ட ஐக்­கிய தேசிய தேசிய கட்­சி­யையும், 67 ஆண்­டு­கால வர­லாற்றை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யையும், 53 ஆண்­டு­கால அர­சியல் வர­லாற்றை கொண்ட மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யையும் ஏனைய சிறிய கட்­சி­க­ளையும் பின்­தள்ளி எமது வெற்­றியை மிகப்­ப­ல­மாக பதிவு செய்­து­கொண்­டுள்ளோம். அடுத்து நடக்கும் தேர்­தல்­களில் 7 மாகா­ணங்­க­ளிலும் முன்­ன­ணியில் வெற்­றியை தக்­க­வைத்­துக்­கொள்ள முடியும்.

கடந்த 51 நாட்கள் அர­சியல் நெருக்­க­டியில் அர­சாங்­கத்தை எடுத்­து­கொள்ள வேண்டும் என்றோ அல்­லது ஆட்­சியை கொண்­டு­செல்ல வேண்டும் என்றோ எந்த முன்­னா­யத்­தமும் எம்­மிடம் இருக்­க­வில்லை. ஆட்­சியை நடத்த இட­ம­ளிக்­கவும் இல்லை. இப்­போது எமக்கு ரணில், சஜித், நவீன் கூட்­ட­ணியை விடவும் சர்­வ­தே­சத்­துடன் போட்­டி­யிட்டே எமது வெற்­றியை தக்­க­வைத்­துக்­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது.

எனினும் இந்த ஆண்டு இறு­திக்குள் எமது ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­மையில் உரு­வாகும் கூட்­ட­ணிக்­கட்சி தமது ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்து அடுத்த கட்ட அர­சியல் போராட்­டத்தில் கள­மி­றங்கும். அதில் இளைஞர் அணியின் முழு­மை­யான ஆதா­ரவும் செயற்­பாடும் அவ­சி­ய­மாக இருக்கும். அதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்,வீழ்ச்சி கண்டுள்ள நாட்டினை மீட்டெடுக்க புதிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் சகலரதும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு:>