Take a fresh look at your lifestyle.

குருநகர் இறங்குதுறையை துறைமுகமாக மாற்றுங்கள்: மீனவர்கள் கோரிக்கை

யாழ்ப்பாணம்- குருநகர் இறங்குதுறையைத் துறைமுகமாக அபிவிருத்தி செய்து தருமாறு, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது, குருநகர் கடற்றொழிலாளர்களால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“இறங்குதுறையைத் துறைமுகமாக ஆழமாக்குவதன் ஊடாகப் படகுகள், கப்பல்கள் வந்து செல்லக்கூடிய சாத்தியங்கள் உருவாகும். இதன்போது இறங்குதுறையை அண்டிய பிரதேசங்களும் அபிவிருத்தி அடையும்.

எனவே, அங்கு அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றிவிட்டு, குருநகரில் துறைமுகம்  அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

மீனவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அந்தப் பகுதியில் முழுமையான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

குருநகர் இறங்கு துறை ஆரம்பகாலத்தில் துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டது. எனினும் உள்நாட்டுப் போரின் காரணமாக அவை தகர்க்கப்பட்டு, தற்போது அதனை அண்டிய பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:>