Take a fresh look at your lifestyle.

கூட்டணி அமைக்காவிட்டாலும் நாம் வெற்றி பெறுவோம்: பசில் சொல்கிறார்

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் கூட் டணி அமைத்­தாலும் இல்­லா­விட்­டா லும் எதிர்­வரும் எந்­த­வொரு தேர்­த­லிலும் வெற்­றி­கொள்ளக் கூடிய ஆளுமை ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கு இருக்கிறது என்று அந்த கட்­சியின் ஸ்தாபகர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.

ஸ்ரீலங்கா பொது ஜன பெர­முன சார்பில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற உள்­ளு­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்பு நேற்று நெலும் மாவத்­தையில் உள்ள அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதன் போதே பஷில் ராஜ­பக்ஷ மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் மேலும் தெரிவித்ததாவது;

2019 ஆம் ஆண்டு தேர்­த­லுக்­கான வரு­ட­மாகும். அந்த வகையில் ஸ்ரீலங்கா பொது ஜன பெர­முன எந்­த­வொரு தேர்­தலை எதிர் கொள்­ளவும் தயா­ரா­கவே உள்­ளது. கிரா­மிய மட்­டத்தில் எமது கட்சி மிகவும் வலு­வா­ன­தொரு நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது.

இத­ன­டிப்­ப­டையில் எதிர்­வரக் கூடிய எந்­த­வொரு தேர்­த­லையும் எதிர்­கொள்ளக் கூடிய ஆளுமை மற்றும் தைரியம் எமக்கு காணப்­ப­டு­கின்­றது. இது மிகவும் மகிழ்ச்­சிக்­கு­ரிய விட­ய­மாகும்.

எதிர்­கா­லத்தில் இடம்­பெறும் தேர்­தல்கள் தொடர்பில் அர­சி­யல்­வா­திகள் பல்­வேறு கருத்­துக்­களை கூறி வரு­கின்­றனர். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் கூட்­டணி அமைக்­கா­விடில் தேர்­தலில் வெற்றி பெற முடி­யாது என்­ற­வொரு தவ­றான நிலைப்­பாட்டை தற்­போது சிலர் பரப்பி வரு­கின்­றனர்.

இந்த தவ­றான பிரச்­சா­ரங்கள் சரி செய்­யப்­பட வேண்டும். தாமரை மொட்டும் கை சின்­னமும் ஒன்­றாகா விடினும் எம்மால் தேர்­தலை வெற்றி கொள்ள முடியும். அதனை கடந்த உள்­ளு­ராட்சி மன்ற தேர்­தலில் நிரூ­பித்­துள்ளோம். ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆட்­சியை முடி­வுக்கு கொண்டு வரக் கூடிய எந்­த­வொரு தேர்­த­லிலும் தாமரை மொட்­டுக்கு வாக்­க­ளிக்க மக்கள் தயா­ரா­க­வுள்­ளனர். அந்­த­ள­வுக்கு தற்­போ­தைய அர­சாங்கம் மீது மக்கள் வெறுப்­ப­டைந்­துள்­ளனர்.

ஆகவே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் கூட்­டணி அமைத்தால் தான் ஸ்ரீலங்கா பொது ஜன பெர­முன வெற்றி பெறும் என்ற நிலைப்­பாடு முற்­றிலும் தவ­றா­ன­தாகும். ஆனால் இரண்டும் ஒன்­றி­ணைந்தால் ஐக்­கிய தேசிய கட்சி படு­தோல்­வி­ய­டையும். தேர்­தலை எதிர்­கொள்ளக் கூடிய மிக வலு­வான ஆளுமை பொது ஜன பெர­மு­ன­வுக்கு காணப்­ப­டு­கின்­றது. கடந்த உள்­ளு­ராட்சி தேர்­தலில் போட்­டி­யிடும் போது சுதந்­திர கட்சி எம்­முடன் இருக்­க­வில்லை. தற்­போது இரண்டு கட்­சி­களும் இணை­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது.

இத­னூ­டாக நாட்­டுக்கு எதி­ரான பல்­வேறு சதிகளை முறியடிக்க முடியும். குறிப்பாக தேசத்துரோகதிட்டங்கள் தேசிய வளங்களை விற்றல் மற்றும் இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என்பவற்றை முற்றாக இல்லாதொழித்து இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

குறிப்பு:>