Take a fresh look at your lifestyle.

விடுதலைக்காய் நின்றொளிர்ந்த வீரரை போற்றுவோம்…

மாண்டுபோனது பத்தொடு மூன்று ஆண்டுகளே
மாளாது போனது மாமனிதரே உம் நினைவுகள்
தீண்டும் தென்றலும் வீரம் கொள்ளும்-புனிதரே
தமிழீழ தேசத்தின் விடியல் தேடி சென்ற வீரரே…

கொக்கட்டி மண் தந்த மைந்தனே கௌசல்யா
கொடிய பகை சதி செய்து உனை வீழ்த்தியதோ
மட்டு அம்பாறை மாவட்ட அரசியல் துறை வித்தகனே
விட்டு எமைப் பிரிந்தே ஆண்டுகள் இத்தனை ஆனதோ…

பரந்த அறிவும் துடுப்புத் தனமும் ஆளுமையும்
உரந்தந்து உறுதி தந்து மண் மீட்பினுக்கு உனைத் தந்ததோ
மாமனிதர் சந்திர நேரு ஐயா உடன் மூன்று தீரர்கள்
மண்ணுக்காய் விதையான நினைவுகள் சுட்டெரிக்கிறதே…

தேசியத் தலைவர் உடன் நீரும் உரையாடி மீண்டபோது
தேசத்தின் சதியாளர் கூட்டினிலே மாட்டினையோ
புகழவன் செந்தமிழன் விதிமாறன் சந்திர நேரு ஐயா
வித்துடலான நாளாம் மாசி ஏழில் நினைவு கூருகிறோம் …

வெலிகந்தை பகுதியிலே வீணர்கள் சதி வலையில்
கொட்டித் தீர்த்த சுடுகுழல் தோட்டாக்களுக்கு
இரையான இளந்தளிர்களே இலட்சிய வீரர்களே
உரைத்து நிற்கிறதே காலம் உங்கள் சரித்திரத்தை…

யுத்த நிறுத்த சூழலில் சூழ்ந்து கொண்ட பகை மேகம்
சூறாவளியாய் உம்முடல் கவர்ந்திட சுடுகாடானது நம் மனம்
ஆழாத்துயரில் ஆழ்த்தியதே அறவழி போராடிய சுடர்களே
வீழாது உங்கள் கனவுகள் கானல் நீராகாது காண்பீர்….

இலட்சியத் தீயில் இன்றுவரை நின்றொளிரும் வீரரே
இலங்குகின்ற உங்கள் புகழ் மாறாது மறையாது
வெலிகந்தை படுகொலையின் பாதக நிலையறிந்து
வலியோடு நாம் எடுக்கும் வீரசபதம் தேசமீட்புக்காய்…

வரி ஆக்கம்..
சிவதர்சினி ராகவன்

குறிப்பு:>