கிணற்றில் வீழ்ந்த மாட்டை காப்பாற்றிய இளைஞர்கள்: தகவல் தெரிவித்தும் தாமதமாக வந்த பிரதேசசபையினர்
பாதுகாப்பற்ற பாழடைந்த கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த பசுமாட்டை அந்தப் பகுதி இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதான சந்திக்கு அண்மையிலுள்ள பகுதியில் பாதுகாப்பற்ற பாழடைந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி வீழ்ந்துள்ளது.
வெளியே வருவதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதும் பசுவால் வெளியே வரமுடியவில்லை இதையடுத்து அப்பகுதி மக்கள் பிரதேச சபையினருக்கு தகவல் வழங்கினர்.
எனினும் பிரதேச சபையினர் குறித்த நேரத்துக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் உரிய முறையில் செயற்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பசு மாட்டினை மீட்டனர்.
குறிப்பு:>