Take a fresh look at your lifestyle.

அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றவர் டிப்பருடன் கைது!

அனுமதி பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிசென்ற குற்றத்திற்காக ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச் சம்பவமானது நேற்று வவுனியா மகாறம்பைகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட காவல்துறையினர் டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போதே அனுமதி பத்திரமின்றி மணல் ஏற்றி சென்றமை தெரியவந்துள்ளது.

டிப்பர் வாகனத்தின் சாரதி கைதுசெய்யபட்டதுடன், டிப்பர் வாகனத்தினையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

குறிப்பு:>