Take a fresh look at your lifestyle.

இனப் படுகொலைத் தீர்மானம்: சட்ட நடவடிக்கை தேவை: விக்கி வலியுறுத்து

2009 இல் நடைபெற்றது இனப்படுகொலை என வடமாகாண சபை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. என்னைப் பொறுத்தமட்டில் இது சமூகரீதியான ஆவணம்தான். இது சட்டரீதியாக கொண்டுவரவில்லை இது தான் நடைபெற்றது இதுதான் உண்மை என்பதை கொண்டுவந்தேன் சட்டப்படியாக எவ்வாறு எந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பது சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாடுகளில் உள்ள மக்கள் நலன்விரும்பிகள், அமைப்புக்கள்தான் இதனை பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

தெரிவு செய்யப்பட்ட ஒருதொகுதி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணியின் ஒழுங்குபடுத்தலில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட 130 மாணவர்களுக்கு மாங்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் வைத்து வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின் இறுதியில் ஊடகவியலாளர் ஒருவர் 2009 இல் நடைபெற்றது இனப்படுகொலை என தெரிவித்து வடமாகாண சபை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை என்ன என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் செய்யவேண்டியதைதான் நான் வட மாகாணசபையில் செய்யவேண்டியதாக இருந்துள்ளது. இதனை நாங்கள் எல்லோரும் ஒருமித்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிந்திக்கவேண்டும்.

என்னைப்பொறுத்தமட்டில் இது சமூகரீதியான ஆவணம்தான். இது சட்டரீதியானதாக கொண்டுவரவில்லை. இதுதான் நடைபெற்றது இதுதான் உண்மை என்பதை கொண்டுவந்தேன் சட்டப்படியாக எவ்வாறு எந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள மக்கள் நலன் விரும்பிகள், அமைப்புக்கள்தான் அவர்கள் இதனை பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பு:>