Take a fresh look at your lifestyle.

தமிழ்ப் பெண்ணே நீ வாழி.!

பெண்ணே நீவாழி 
 பொன் நாடு தந்த
தமீழீழ விடுதலைப் புலிப் பெண்ணே – நீ
விறுகொண்டு எம்
தேசத்தின் விடியலை
தேடி விரைத்திடும்
வேளை வீழ்ந்திடில் ,
வீரப்பெண் புலியாய்
நாளை நாம் தேசத்திலே
நன் மதிப்பைப் பெற்றிடுவாய் ..
பெண்ணே நீவாழி –
 
போரிடும் தேசத்திலே
வாழ்கின்ற உந்தனுக்கு
வருகின்ற துன்பம் எல்லாம்
இனி இல்லை என்று
இயல்பாய் இருந்திருவாய் ,
விடவிற்காய் காத்திருக்கும்
விடிகின்றதேசத்திலே
உனக்கும் ஓரிடம்
உள்ளது வீரப்புலிமகளே
பெண்ணே நீ வாழி
 
 
தமிழினமே புயலாம்
தலைவனின் கரங்களை
வலுப்படுத்த விரைந்திடும்
வசந்தம் வருகின்ற காலத்திலே
புரட்சிகள் செய்து எங்கள்
பூமியை இன்று உலகமே
வியந்து பார்த்திட வைத்த
பெண்ணே நீ வாழி
தமிழ்ப் பெண்ணே நீ வாழி
 
ஆக்கம் :பூ.நளாயினி
வெளியீடு :எரிமலை இதழ் 2008

குறிப்பு:>