Take a fresh look at your lifestyle.

வறுமை ஒழிப்பு நடைமுறைப் படுத்தப்படுவதில்லை: அமெரிக்க தூதுவரிடம் ஆனோல்ட் தெரிவிப்பு

 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு வறுமை ஒழிப்பு இருந்­தா­லும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் இல்லை. இதற்­குத் தீர்வு காண­வேண்­டும். இவ்­வாறு, அமெரிக்காவுக்கான அமெ­ரிக்கத் தூது­வர் அலெய்னா பி டெப்­ளிட்ஸ்­ஸி­டம் யாழ்ப்­பாண மாந­கர முதல்­வர் இம்­மா­னு­வல் ஆனோல்ட் தெரி­வித்­துள்­ளார்.

மாந­கர அலு­வ­ல­கத்­தில் நேற்­று­முன்­தி­னம் இந்­தச் சந்­திப்பு இடம்­பெற்றது. அது தொடர்­பில் முதல்­வர் அனுப்­பிய செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

தற்­போது மக்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­கள், மக்­க­ளின் நிலைப்­பா­டு­கள் பற்றி முதல்­வ­ரி­டம் வின­வி­னார். மக்­கள் அச்­சத்­தோடு இருக்­கின்­ற­னர். நம்­பிக்­கையை இழந்­து­விட்­ட­னர்.

கார­ணம், ஶ்ரீலங்கா மீதான ஐ.நா வின் 30/1 தீர்­மா­னம் மற்­றும் 34/1 தீர்மா­னங்­கள் ஊடாக மக்­கள் எதிர்­பார்த்­தி­ருந்த நீண்­ட­கால அர­சி­யல் அபி­லா­சை­க­ளுக்குத் தீர்வு கிடைக்­கும் என்ற எதிர்­பார்ப்பு கடந்த ஒக்­ரோ­பர் அர­சி­யல் புரட்­சி­ யு­டன் நாடா­ளு­மன்­றில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்மை இல்­லாது போனது.

காணா­மல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது? என்­ப­தற்­கான பதிலை உரிய தரப்­பி­னர் முன்­வைக்க வேண்­டும். அர­சுக்­குப் பொறுப்பு உள்­ளது.
வடக்கு மாகாண சபை­யைப் பொறுப்­பேற்­கும்­போது இருந்த நோக்­கம் நிறை­வே­றி­யுள்­ளதா? நோக்­கங்­கள் அடை­யப்­பட்­டுள்­ள­னவா? என தூது­வர் வின­வி­னார்.

அதற்குப் பதி­ல­ளித்த முதல்­வர், நோக்­கங்­கள் பல அடை­யப்­ப­ட­வில்லை. பெரு முயற்­சி­க­ளும் எட்­டப்­ப­ட­வில்லை. வசதி படைத்­த­வர்­கள் உயர்ந்து செல்ல, வறு­மைக் கோட்­டி­லுள்­ள­வர்­கள் வறு­மை­யால் கீழ் நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருக்­கின்­றார்­கள். வேலை­தேடும் பட்­ட­தா­ரி­க­ளின் பிரச்­சினை பற்­றி­யும் தூது­வ­ருக்கு எடுத்­துக் கூறப்­பட்­டது.

ஜெனீ­வா­வில் இந்­த­முறை ஶ்ரீலங்கவுக்கு வழங்­கப்­ப­டு­கின்ற கால அவ­கா­சத்­தால் மாத்­தி­ரமே ஶ்ரீலங்காவின் நிகழ்ச்சி நிர­லைத் தொடர்ந்து கொண்டு ஶ்ரீலங்காவின் நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் கண்­கா­ணிக்க முடி­யும்.

இல்­லா­விட்­டால் ஜெனீவா கூட்­டத்­தொ­ட­ரில் ஶ்ரீலங்கா தொடர்­பான நிகழ்ச்சி நிரல் இல்­லாது போய்­வி­டும் என்ற கருத்தை தூது­வர் குறிப்­பிட்­டார். இந்­தக் கருத்­தையே கூட்­ட­மைப்­பும் வலி­யு­றுத்தி வரு­கி­றது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

குறிப்பு:>