Take a fresh look at your lifestyle.

இனவழிப்பு அடையாள ஊர்தியுடன் பல்கலைக்கழக மாணவர்கள் கிளிநொச்சியில் துண்டுபிரசுரம் விநயோகம்!

அழிப்பு அடையாள ஊர்தியுடன் கிளிநொச்சிப் பிரதேசத்தில் துண்டுப்பிரசுர நடவடிக்கையில் ஈடுபடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்..!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் எதிர்வரும் 16ம் திகதி நடத்தப்படவுள்ள எழுச்சி பேரணிக்கு ஆதரவு திரட்டும் முகமாக, வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வாகனம் பேரணி (12/03/2019) யாழில் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் 16 ஆம் திகதி மாபெரும் எழுச்சி பேரணியை யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் வாகனப் பேரணி யாழ்ப்பாணம் முழுவதும் சென்று அதனைத் தொடர்ந்து வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த எழுச்சி பேரணி தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆதரவைத் திரட்டும் நோக்கில் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து வாகனப் பவனியை பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்த தமிழின அழிப்பு அடையாள ஊர்தி தற்போது கிளிநொச்சிப் பிரதேசத்தில் துண்டுப்பிரசுர நடவடிக்கையில் ஈடுபடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்…

குறிப்பு:>