Take a fresh look at your lifestyle.

2019ம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பான குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று!

2019ம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பான குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சு பதவியை வகிக்கும் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு , வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி முதலான அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளது. இதேநேரம் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு உட்பட நேற்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 23 நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்கள் மற்றும் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிவு அடிப்படையில் வாக்கெடுப்பைக் கோரியதாக அவதானிக்க முடிந்தது. எவ்வாறாயினும் சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியல்லவும் அவரைத்தொடர்ந்து எழுந்த பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவும் வாக்கெடுப்பு அவசியமில்லை என்று அக்கிராசனத்திற்கு அறிவித்தனர். இதனையடுத்து நேற்று விலாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் திருத்தங்கள் மற்றும் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

 

 

குறிப்பு:>