Take a fresh look at your lifestyle.

இனப்படுகொலைக்கு நீதி வேண்டி தமிழீழ மக்களின் எழுச்சிப்பேரணி!

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மக்கள் இணைந்து மேற்கொள்ளும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டி மாபெரும் பேரணி ஆரம்பமானது .

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரும் எழுச்சி பேரணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

பல்கலைக்கழக முன்றலில் தற்போது ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி, முற்றவெளி வரை பயணிக்கவுள்ளதோடு, அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பேரணி இன்று (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.

வட தமிழீழம் யாழில் ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி, முற்றவெளி வரை செல்லவுள்ளது. அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது காணாமலாக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும், தமிழர்கள் விடயத்தில் ஐ.நா. இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர்.

குறிப்பு:>