Take a fresh look at your lifestyle.

திருகோணமலையினை துண்டாடி மேலும் ஒரு பிரதேச செயலர் பிரிவு அமைக்க திட்டம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் தோப்பூர் பிரதேச செயலாளர் பிரிவு என்ற ஒரு புதிய பிரிவொன்றை பிரிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தோப்பூர் பிரதேசம் முஸ்லீம் மக்கைள அதிகளவிலும் தமிழ் மக்களை குறைந்த அளவிலும் கொண்ட பிரதேசமாக காணப்படுகின்றது முஸ்லீம் மக்களின் ஆட்சியே அங்கு தலைதூக்கியுள்ளது.

இந்த முன்மொழிவிற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது இதற்கான முன்னெடுப்புக்களை முஸ்லீம் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளார்கள்

கூட்டமைப்பின் இரா சம்மந்தனின் சொந்த மாவட்டத்தில் சம்மந்னுக்கே தெரியாமல் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் தங்கள் ஆதிக்கத்தினை நிலைநாட்ட துடித்து வருகின்றார்கள் இவ்வாறே மட்டக்களப்பிலும் தங்களுக்கு என்று ஒரு பிரதேச செயலகம் வேணும் என்ற போராட்டங்களை நடத்திவருகின்றார்கள்.

திருகோணமலை தோப்பூர் பகுதிக்கு தனியான பிரதேச செயலர் பிரிவு அமைக்கப்பட்டால் அங்கு உள்ள தமிழ் மக்கள் நசுக்கப்படுவது என்பது உண்மை இவை அனைத்திற்கம் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தலை அசைத்து நிக்கின்றார்களா என்ற கேள்வி சம்பூர் மற்றும் மூதூர் தோப்பூர் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறிப்பு:>