Take a fresh look at your lifestyle.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் அதிகார போக்கான ஆட்சியை வெளிப்படுத்துவதாக விசனம் !

30 வருடங்களுக்கு மேலாக ஒரு பிரதேச சபை  இல்லாத நிலையில் தொடர்ச்சியாக இருந்து வந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை கடந்த முறை பிரதேச  சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய  உறுப்பினர்களை  கொண்டு ஒரு சபை உருவாக்கப்பட்டு இருந்தது.

 இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உறுப்பினர் ஒருவர் தவிசாளராக வருகை தந்த இந்த சபையிலே குறித்த தவிசாளர் அதிகார போக்கான  ஆடசியை வெளிப்படுத்துவதாக ஏனைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஓராண்டு பூர்த்தியை நிறைவு செய்து இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்ற வகையில் சபையில் இடம்பெற்ற பன்னிரண்டாவது அமர்விலே சபையினுடைய இயந்திரங்கள் பயன்படுத்துவது மற்றும் மின் விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தன்னிச்சையாக தவிசாளர் செயற்படுவதாகவும் இது விடயம் தொடர்பாக தவிசாளரிடம் கேள்வி கேட்பதற்காக சபையில் முற்பட்ட வேளையில் ஏனைய விடயங்கள் பகுதியிலேயே  அந்த கேள்வியை கேட்க முற்பட்ட வேளையிலேயே தவிசாளர்   சபை அமர்வு  நிறைவு செய்யப்பட்டது  என்று  எழுந்து சென்றுள்ளதாகவும்  இதனூடாக தவிசாளர் தன்னிச்சையான  செயற்பாட்டை   எளிதாக  எடுத்துக்  காட்டுவதாகவும்  இவ்வாறான செயற்பாடுகளால்  தொடர்ச்சியாக ஏனைய கட்சி சார்ந்த உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதாகவும் கட்சி அரசியலை விடுத்து இந்த இடத்திலே மக்களுடைய அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அனைவருடனும் சேர்ந்து இயங்க  வேண்டும் எனவும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கிறார்கள்.

 இதுதொடர்பாக  புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் இடம் வினவியபோது சபை அமர்வு நிறைவு  பெற்று  தான்  சபையை  நிறைவு செய்ததாகவும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை மறுப்பதாகவும்  தெரிவித்திருக்கின்றார்  எது எவ்வாறு இருப்பினும் ஆட்சி அமைப்பது தொடக்கம் இன்றுவரை அந்த சபையினுடைய குழப்ப நிலைமைகள் தொடர்ந்து செல்கின்றமையினால் மக்களுக்கான  அபிவிருத்திகள்  பாதிக்கப்படக்கூடாது  என சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

குறிப்பு:>