Take a fresh look at your lifestyle.

அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் துணுக்காய் பிரதேசம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேசம் 326 கிலோமீற்றர் சுற்றளவினை கொண்ட பிரதேசம் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.
12 கிராமங்களை கொண்ட இந்த பிரதேசத்தில் பாடசாலையில் மாணவர்களை இணைப்பதற்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலை வீதிகள் படு மோசமாக காணப்படுகின்ற பெரும்பாலான கிராமங்களில் கிராம வீதிகள் இன்றும் செப்பனிடாத நிலையில் காணப்படுகின்றன.
துணுக்காய் பிரதேச சபையில் எந்த விதமான அடிப்படை தேவைகளும் இதுவரை வழங்கப்படவில்லை ஒரு மோட்டர் கிறைண்டர் கூட இல்லாத நிலை ஒரு வீதியினை பிரதேச சபை திருத்தம் செய்வதற்கு இயந்திரங்கள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் இது தொடர்பில் பல இடங்களுக்கு கோரிக்கை வைத்தும் எதுவித உதவிகளும் கிடைக்கவில்லை என்று துணுக்காய் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பு:>