Take a fresh look at your lifestyle.

மல்லாவி ஆதார வைத்திய சாலையில் பல்வேறு பிரச்சனைகள் நோயளர்கள் சிரமம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய்,மாந்தை கிழக்கு பிரதேசத்தினை சேர்ந்த மக்கள் பயன்பெறும் ஒரு மருத்துவமனையாக மல்லாவி ஆதார மருத்துவ மனை காணப்படுகின்றது இந்த மருத்துவமனையில் நேயாளர்கள் சிகிச்சை பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களுக்கு தமிழ் தெரியது நோயாளிகளுக்கு சிங்களம் தெரியாத மொழிப்பிரச்னை தொடர்ச்சியகா இடம்பெற்று வருவதால் நோயாளர்கள் சிகிச்சையினை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
மாந்தைகிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசம் பாரிய பரந்த பிரதேசம் இங்கு வாழ்கின்ற மக்கள் நோய்வாய்பட்டு இறந்துவிட்டால் மருத்துவமனையில் அதற்கான கட்டிடம் காணப்படுகின்றது உடலை வைத்திருப்பதற்கான குளிரூட்டி இல்லை திடீர் மரணவிசாரணை அதிகாரி இல்லை அவ்வாறு உயிரிழந்தால் கிளிநொச்சி,அல்லது வவுனியா அல்லது  முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கே உடலினை கொண்டுசெல்லவேண்டிய நிலை இதனால் பல சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்கள்

குறிப்பு:>