Take a fresh look at your lifestyle.

யாழில் பயணச்சீட்டு நிறுவனம் 70 லட்சம் ரூபா மோசடி!

வெளி­நா­டு­க­ளுக்­கான வானூர்தி பய­ணச் சிட்டை விநி­யோ­கிக்­கும் தனி­யார் நிறு­வ­னம், தம்மை ஏமாற்­றி­ய­தா­கத் தெரி­வித்து 30 க்கும் மேற்­பட்­டோர் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­துள்­ள­னர்.

சுமார் 70 லட்­சம் ரூபா வரை­யில் மோசடி செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் இது தொடர்­பில் தெரி­வித்­த­தா­வது:

யாழ்ப்­பா­ணம் பிற­வுண் வீதி­யில் உள்ள தனி­யார் நிறு­வ­னத்­தின் ஊடாக, வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­வ­தற்கு வானூர்தி பய­ணச் சிட்­டைக்கு விண்­ணப்­பித்­தோம். அவர்­க­ளும் பய­ணச் சிட்டை வழங்­கி­னார்­கள்.

அந்­தப் பய­ணச் சிட்­டை­யு­டன் வானூர்தி நிலை­யத்­துக்­குச் சென்­றால், அது இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள­தா­கக் கூறு­கின்­ற­னர். இரு வழிப் பய­ணச் சிட்­டை­யு­டன் வெளி­நாடு சென்ற ஒரு­வர், நாட்­டுக்­குத் திரும்பி வரும்­போது அவ­ரது வானூர்­திச் சிட்டை இடை­நி­றுத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு பல­ரும் ஏமாற்­றப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர். சுமார் 70 லட்­சம் ரூபா மோசடி செய்­யப்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

சுமார் 30 பேர் வரை­யில் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில் நேற்­றைய தினம் 14 பேரின் முறைப்­பாடு மாத்­தி­ரமே பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்­டோர் குற்­றம் சுமத்­திய நிறு­வ­னத்­தின் பணி­யா­ளர்­க­ளை­யும் பொலி­ஸார் அழைத்து விசா­ரணை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

குறிப்பு:>