Take a fresh look at your lifestyle.

மோடியும், எடப்பாடியும் ‘அமைதிப்படை’ அமாவாசைகள் .?

பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அமைதிப்படை சினிமாவில் வரும் அமாவாசைகளாக திகழ்கின்றனர் என நடிகர் வாகை சந்திரசேகர் எம்எல்ஏ கூறினார்.சேலம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து, நடிகர் வாகை சந்திரசேகர் எம்எல்ஏ பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி, தற்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். இதையும் அவர் நிறைவேற்ற மாட்டார். மோடி போன்று அல்லாமல், மக்களின் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில், திமுக கொண்டு வந்த பல்வேறு மக்கள் நல திட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

அரசியலில் பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடியும் அமைதிப்படை சினிமாவில் வரும் அமாவாசையாக திகழ்கின்றனர். மோடி, பிரதமர் ஆவதற்கு முன்பு பாஜக மூத்தத்தலைவர் அத்வானியின் காலில் விழுந்தவர். தற்போது அவரை மதிப்பதில்லை. தமிழகத்திலும் அதே நிலை தான் உள்ளது. மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் இந்த அரசுக்கு முடிவு கட்ட, திமுக கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

குறிப்பு:>