Take a fresh look at your lifestyle.

வடதமிழீழ அறுகுவெளி பகுதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு

 

வடதமிழீழம்: யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பிக்கப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கந்தைய வாமதேவன் தலைமையில் நீரேற்றும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அ.நிமலரோகன் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் து.சுபோகரன், ஹற்றன் நசனல் வங்கி முகாமையாளர் எம்.டேமியன் ரஞ்சித், பிரதேச கிராமிய வங்கி உதவித் திட்ட முகாமையாளர் கே.தியாகராஜா உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், ஆனந்தா உப்பு உற்பத்தி நிறுவன ஊழியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

குறிப்பு:>