Take a fresh look at your lifestyle.

சித்திரை தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் திக்கம் மக்கள்

2019 ஆம் ஆண்டின் தமிழ் சித்திரை புதுவருடப்பிறப்பினை வரவேற்று சிறப்பிக்கும் முகமாக வடதமிழீழம், வடமாராட்சி திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினரால் பொங்கல் பானை வடிவில் வரவேற்புக் கூடு அமைக்கப்பட்டுள்ளது

பொங்கல் பானை வடிவிலான கூடு வீதியால் செல்பவர்களை மிகவும் கவர கூடிய வகையில் பொது இடத்தில் அமையபெற்றுள்ளது.

மேலும் மேற்படி நூல் நிலையத்தினர் சென்ற வருடமும் முத்தமிழ் விழாவினை கலை, கலாச்சார,பண்பாட்டு விழுமியங்களுடன் நடாத்தி பல்வேறு தரப்பட்டவர்களின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர் .

தவிரவும் புலம் பெயர் திக்கம் வாழ் உறவுகளின் ஆசியுடன் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பாராம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற ஏற்பாடாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:>