Take a fresh look at your lifestyle.

மக்களோ வீதியில் கூட்டமைப்போ புத்தாண்டு விழாவில்!

தமிழீழத்தில் மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில் அதனை ஒரு பொருட்டாக எடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழில் நடைபெறும் சமாதான தேசிய நல்லிணக்க புத்தாண்டுடில் கலந்து கொண்டு உள்ளது

தேசிய நல்லிணக்க அமைச்சு மற்றும் யாழ்। மாவட்ட செயலகம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன।

புத்தாண்டை கொண்டாடும் வகையில் தமிழ், சிங்கள மக்களின் பண்பாடுகள், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உணவுகள் பரிமாறப்பட்டதுடன், பண்பாட்டு நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன இதன்போது இடம்பெற்றன।

இந்த நிகழ்வில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்।ஏ।சுமந்திரன், சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு இராஜாங்க மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சர் ஏ।எச்।எம்।பௌசி, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் இந்திய துணை தூதுவர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்।

இந்த நிகழ்வை முன்னிட்டு யாழ் துரையப்பா மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ।

குறிப்பு:>