Take a fresh look at your lifestyle.

கோட்டாவுக்கு எதிரான வழக்கில் களமிறங்கும் பிரபல சட்டத்தரணி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்கை சட்டத்தரணி ஸ்கொட் கில்மர் நடத்தவுள்ளார்.

ஊடகவியலாளர் மேரி கொல்வின் படுகொலை வழக்கில் சிரிய அரசுக்கு எதிராக வாதாடி வெற்றி பெற்று, 30 கோடி டொலர்களை அபராதமாகச் செலுத்த வைத்தவரே, சட்டத்தரணி ஸ்கொட் கில்மர் ஆவார்.

கோட்டாபயவுக்கு எதிராக இரு வழக்குகள் அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் கோட்டாபயவுக்கு எதிராக, லசந்தவின் மகள் அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அதேவேளை தன்னைக் கொடூரமாக சித்திரவதை செய்தார் என கோட்டாபயவுக்கு எதிராகத் தமிழர் ஒருவர் கலிபோர்னியாவில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். சித்திரவதை செய்வதற்கான உத்தரவு மற்றும் கட்டளைகள் அனைத்தும் கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டதெனவும், இந்தச் செயற் பாடுகளுக்கு கோட்டாபய சட்டபூர்வமாகப் பொறுப்பு கொண்டவர் எனவும் சட்டத்தரணி கள் வாதாடவுள்ளனர்.

எனினும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டிருந்தார் எனப் பல ஆண்டுகளாக கோட்டாபய தனது பகிரங்க அறிக்கைகளில் தெளிவு படுத்தியுள்ளார் என கில்மர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணியான ஸ்கொட் கில்மரே பல்வேறு வழக்குகளை வாதாடி வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக கோட்டாபயவுக்கு எதிராக தீர்ப்புகள் வரலாம் என சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

குறிப்பு:>