Take a fresh look at your lifestyle.

தாரகம் இணையத்தை முடக்க இலங்கையில் இருந்து முயற்சி!

தாரகம் இணையத்தை நேற்று இரவு முதல் இலங்கையில் இருந்து முடக்குவதற்கான முயற்சி இனம்தெரியாத நபர்களால் நடத்தப்பட்டுவருகிறது.இதன்காரணத்தால் நேற்று இரவு 13 நிமிடங்களும்.இன்று பகல் 22 நிமிடங்களும் எமது இணையம் தடங்கலை எதிர்நோக்கி இருந்தது.

இது தொடர்பாக எமது சேவை வழங்குநரை தொடர்பு கொண்ட போது அவர்கள் இலங்கையில் இருந்து எமது இணைய இயங்குதளத்தை நோக்கி DDOS எனப்படும் சேவை நிறுத்த தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்திருந்தனர்.

அதன்போது அவர்கள் வழங்கிய IP முகவரியை வைத்து ஆராய்ந்து பார்த்ததில் இலங்கை தொலைத்தொடர்பு கூட்டுத்தாபனத்தில்(Srilanka Telecomm) பதிவு செய்யப்பட்டு இலங்கையில் ரஜகிரிய(IP முகவரியை வைத்து இலங்கையில் குறிப்பாக இடங்களை கண்டறிய முடியாது) என்கின்ற இடத்தில் இருந்தே இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

தமது IP முகவரி வெளிப்படையாக தெரியும்படியே இந்த தாக்குதலை தொடுத்திருக்கும் நபர்கள் யாராக இருக்கமுடியும் என ஆராய்ந்தது பார்த்ததில் நேற்று பதிவிடப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழகம் தொடர்பான செய்தியின் எதிரவினையாக பூரண தொழில்நுட்ப அறிவற்ற மாணவர்கள் இவ்வாறு IP முகவரியை கூட மறைக்காமல் DDOS தாக்குதலை தொடுத்திருக்ககூடும்.

அல்லது இலங்கை அரச சார்பு அரசியல் கட்சிகளின் செயற்பாடகவே இருக்கவே வாய்ப்பிருக்கிறது காரணம் இலங்கையின் தொலைதொடர்பு அமைப்பின் படி IP முகவரியை வைத்து மிக இலகுவாக நபரை இணங்கான முடியும்.அந்த நிலையில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் ஒரு தனிநபரால் இதை செய்யமுடியாது எனபதே உண்மை.

அந்த வகையில் ஒரு குழு தாரகம் இணையத்தளத்தை முடக்க முயற்சி செய்து வருவது வெளிப்படையாகி உள்ளது.

தடைகளைதாண்டி பயணிப்போம் 

குறிப்பு:>