Take a fresh look at your lifestyle.

சிங்கள மயமாகும் கிளிநொச்சி வைத்தியசாலை: சித்திரை திருநாளில் அம்பலம்

வடதமிழீழம்: கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் நேற்று கொண்டாடப்பட்ட சித்திரை திருநாள் கொண்டாட்டம் சிங்கள பாரம்பரியப்படி நடைபெற்றது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், கிளிநொச்சி வைத்தியசாலையை சிங்கள பேரினவாதம் தம் கையில் வளைத்துக்கொண்டது புலனாகியுள்ளது..

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் நேற்று சித்திரை திருநாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இந்த விடுதியில் வழிபாட்டிற்காக இந்து, கிறிஸ்தவ, பௌத்த கடவுள்களின் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எனினும், நேற்றைய சமய நிகழ்வுகள் பௌத்த முறைப்படியே இடம்பெற்றன.

கிரிபத் தயாரிக்கப்பட்டு, இந்துக்கடவுள்களிற்கும் படைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. தமிழ் மக்கள் மதங்களிற்கு விரோதமானவர்கள் அல்ல அவர்களிடம் மதங்களிற்கிடையேயான இணக்கப்பாடு இருக்கிறது ஆனால் தமிழீழ பிரதேசத்தின் முக்கிய வைத்தியசாலையில் தமிழர் கலாச்சார புதுவருட நிகழ்வு செய்ய முடியவில்லையா என ஆதங்கள் எழுந்துள்ளது.

தமிழீழ பகுதிகளில் இருக்கும் பணி வெற்றிடங்களிற்கு தகுதியுடையோராக தமிழ் இளையோர் அதிகமானவர்கள் இருந்தும் பேரினவாதம் கபடத்தனமாக பேரினவாத சிங்களவர்களை பணிக்கு நியமித்து வருவதுடன் பணியிடங்களை சிங்கள மயமாக்கி வருவதும் வெகு நாளைக்கு நிலைக்கப் போவதில்லை

குறிப்பு:>