Take a fresh look at your lifestyle.

ஆக்கிரமித்திருந்த காணிகளுக்குள் அதிரடியாக நுழைந்து தமிழ் மக்கள்!

வடதமிழீழம்: கிளிநொச்சி- பளை கரந்தாய் பகுதியில் மக்களுக்கு சொந்தமான சுமாா் 90 ஏக்கா் காணியை தென்னை அபிவிருத்தி சபை ஆக்கிரமித்திருந்த நிலையில், பொறுமையின் எல்லை கடந்த மக்கள் இன்று தமது சொந்த காணிகளுக்குள் நுழைந்து குடிசைகளை அமைக்க தொடங்கியுள்ளனா்.

மேற்படி 90 ஏக்கா் காணி மக்களுக்கு சொந்தமான காணிகள். இதனை தமக்கு சொந்தமான காணி என அடையாளப்படுத்திய தென்னை அபிவிருத்தி சபை மக்களை மீள்குடியேற அனுமதிக்காமல் தொடா்ந்தும் தடுத்துவந்தது. இந்நிலையில் மக்கள் தொடா்ச்சியாக தமது காணிகளை கேட்டுவந்தனா்.

எனினும் மக்களுடைய கோாிக்கை தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்ற காலை 6 மணியளவில் அதிரடியாக தமது சொந்த காணிகளுக்குள் நுழைந்த மக்கள் அங்கு பற்றைகளை துப்புரவு செய்து கொட்டில்களை அமைத்து வருகின்றனா்.

 

 

குறிப்பு:>