Take a fresh look at your lifestyle.

போலீஸ் அதிகாரியிடம் எகிறிய திமுக எம்எல்ஏ.?-காணொளி இணைப்பு .!

சென்னை: “யோவ் என்னய்யா பண்ணுவே நீ.. மரியாதை கெட்டுடும் ஜாக்கிரதை.. அப்படித்தான் பேசுவேன் நான்.. என்னய்யா கழட்டுவே நீ?” என்று போலீஸ் அதிகாரியிடம் எகிறிய திமுக எம்எல்ஏ எழிலரசனின் வீடியோதான் இப்போது சுட சுட வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பிரசாரம் செய்ய வந்தபோது, அங்கு ஏராளமான அதிமுகவினர் திரண்டனர். அதே நேரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள வருவதாக இருந்தது.

இதன்காரணமாக தேரடி பகுதியில் திமுகவினரும் திரண்டு விட்டனர். ஒரு பக்கம் திமுக, மறுபக்கம் அதிமுக என தொண்டர்கள் திரண்டுவிட்டதால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது.

அது மட்டுமல்லாமல், திமுகவினருக்கு தேர்தல் பிரசாரம் நடத்த அனுமதி வழங்கிய இடத்திலும் அதிமுகவினர் குவிந்து விட்டனர். இதனால் அந்த இடமே பதட்டமாகிவிட்டது. அப்போதுதான் அங்கு காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன் வந்தார்.


பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதில் ஒருவர் போலீஸ் அதிகாரி போல தெரிகிறது. அவரிடம் ஒருமையில் பேசி சண்டைக்கு போய்விட்டார் எழிலரசன்.

“யோவ் என்னய்யா பண்ணுவே நீ.. மரியாதை கெட்டுடும் ஜாக்கிரதை.. அப்படித்தான் பேசுவேன் நான்.. என்னய்யா கழட்டுவே நீ?” என்று ஆவேசமாக பேசினார். ஆனால் அந்த அதிகாரி நிலைமையை கட்டுப்படுத்தவே முயற்சி செய்தார். பதிலுக்கு எம்எல்ஏவிடம் ஆவேசமாக நடந்து கொள்ளவில்லை. மாறாக எழிலரசனுடன் வந்த திமுக ஆதரவாளர்கள் கொதித்து போய் பேசினர்.

பிறகு நிர்வாகிகளுடன் சேர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டார். இதனால், விஷ்ணுகாஞ்சிபுரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் திமுக எம்எல்ஏ எழிலரசன் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே திமுக என்றாலே ரவுடி கட்சி என்று பெயர் கிடைத்துள்ளது.

குறிப்பு:>